×

பொறையார் பகுதியில் மாடு, குதிரைகளை சாலையில் திரிய விட்டால் கடும் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

தரங்கம்பாடி: தரங்கம்பாடி பொறையார் பகுதியில் சாலைகளில் திரிந்து விபத்து ஏற்படுத்தும் மாடு குதிரைகளை உரிமையாளர்கள் வீட்டில் கட்டி வளர்க்க வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, பொறையார் பகுதியில் குதிரைகள் மற்றும் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் புகார்கள் வந்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
தரங்கம்பாடி பகுதியில் குதிரைகள் மற்றும் கால்நடைகள் போக்குவரத்து இடையுறாகவும், விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரப்பட்டதை தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள் மற்றும் கால்நடைகளை உரிமையாளர்கள் உடன் அதற்குரிய இடத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் அவ்வாறு கட்டி பராமரிக்காவிட்டால் குதிரைகள் மற்றும் கால்நடைகள் மாவட்ட நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு இம்மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி வனப்பகுதியில் விடப்படும். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கால்நடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.

The post பொறையார் பகுதியில் மாடு, குதிரைகளை சாலையில் திரிய விட்டால் கடும் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Porayar ,Tharangambadi ,District ,Collector ,Mahabharathi ,Mayiladuthurai district ,Tharangambadi… ,District Collector ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...