×

புதுக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு

புதுக்கடை, ஜன. 7: புதுக்கடை அருகே வீட்டில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி செந்தறை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதி ராஜகுமாரி என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக 2 கிலோ மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ராஜகுமாரி மீது வழக்கு பதிவு செய்தனர்.

The post புதுக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Pudukada ,Sentharai ,Keelkulam ,Pudukada… ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இருந்து மீன் கழிவுகளுடன் வந்த 4 வாகனங்கள் பறிமுதல்: 5 பேர் கைது