ஒரே நேர்க்கோட்டில் 3 கோள்கள்: இரவில் கண்டு ரசிக்கலாம்

சென்னை: பூமியிலிருந்து சுமார் 10.6 கோடி கி.மீ தூரத்தில் வெள்ளி கிரகம் இருக்கிறது. சூரிய குடும்பத்தின் மிகவும் பிரகாசமாக இருக்கும் இந்த கிரகமும், பூமியிலிருந்து ஏறத்தாழ 3.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவும், 151 கோடி கி.மீ தொலைவில் உள்ள சனி கிரகமும் நேற்று ஒரே நேர்க்கோட்டில் வந்திருக்கிறது. 2.2 டிகிரிதான் மூன்று கோள்களுக்கும் இடைவெளி இருந்திருக்கிறது. இது ஒரு வானியல் அதிசயமாகும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நிகழும். இந்த 3 கிரகங்களையும் ஏறத்தாழ நேர்க்கோட்டில் பார்க்க முடியும். ஒளி மாசு குறைவாக உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த அதிசயத்தை பார்க்க முடியும். சென்னையில் இருந்தும் இது தெரியும். மேற்கு வானில் நிலவுக்கு கீழே மங்கலாக ஒரு நட்சத்திரம் தெரியும். அதுதான் சனி கிரகம்.

அதை தொடர்ந்து பிரகாசமாக ஒரு நட்சத்திரம் தெரியும் அதுதான் வெள்ளி கிரகம். ஆனால், தெளிவாக பார்க்க வேண்டும் எனில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வைணு பாப்பு வானியல் ஆய்வகத்தின் அருகில் இதை தெளிவாக பார்க்க முடியும். இது தற்போது திருப்பத்தூரில் இருக்கிறது. இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். தொலை நோக்கி, பைனாகுலார் உள்ளிட்டவை இருந்தால் இதனை இன்னும் சிறப்பாக பார்த்து ரசிக்க முடியும். ஆனால் அவை இல்லாமலேயே கூட இதை சிறப்பாக பார்க்க முடியும். சூரியன் மறைந்த பின்னர், 2 மணி நேரம் கழித்து இதை பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது சரியாக இரவு 8 மணி முதல் 8.30 வரை இதை பார்த்து ரசிக்க முடியும்.

The post ஒரே நேர்க்கோட்டில் 3 கோள்கள்: இரவில் கண்டு ரசிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: