×

ஜப்பானில் ரூ.11 கோடிக்கு விற்பனையான “ப்ளூஃபின் டியூனா மீன்: டோக்கியோ மீன்சந்தையில் விற்பனை அமோகம்

டோக்கியோ: உலகின் அதிக சுவை மற்றும் அதிக விலை உள்ள மீன்களில் சூரை மீனுக்கு முக்கிய இடம் உண்டு புத்தாண்டை ஒட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள பிரபல மீன் சந்தையில் ப்ளூஃபின் டியூனா எனப்படும் சூரை மீன் ஏலமிடப்பட்டது. 276 கிலோ எடை கொண்ட இந்த மீன் இந்திய மதிப்பில் ரூ.11 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

ஜப்பானின் பிரபல உணவகம் ஒன்று இந்த மீனை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது. டியூனா மீன்கள் உலகிலேயே மிக சுவையானவையாம். பசுபிக் கடலில் அதிகம் கிடைக்கும் இந்த மீன் ருசிக்கு ஜப்பானியர்கள் அடிமை. அதிலும் ப்ளூஃபின் டியூனா இன்னும் சுவை அதிகமாம். இதற்கு முன்னர் இதே சந்தையில் 2019ல் ஒரே நாளில் 26 கோடிக்கு நீல சூரைமீன் விற்பனையாகி சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது ஒரே மீன் அதிக விலைக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

 

The post ஜப்பானில் ரூ.11 கோடிக்கு விற்பனையான “ப்ளூஃபின் டியூனா மீன்: டோக்கியோ மீன்சந்தையில் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Bluefin ,Japan ,Tokyo ,Fishery ,Dinakaran ,
× RELATED ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது சைபர்...