×

தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: “ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்; தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது. அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார்; ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை; முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார். 2023-ம் ஆண்டு ஆளுநர் உரையில் சில பகுதிகளை தவிர்த்தும் சில வாசகங்களை சேர்த்தும் ஆர்.என்.ரவி படித்தார்; 2023-ம் ஆண்டே ஆளுநரின் செயல்பாட்டுக்கு பேரவையிலேயே முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார்; ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது; 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்; அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்” என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.

The post தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Duraimurugan ,Chennai ,Speaker ,Appavu ,Governor ,
× RELATED நீர்வளத்துறையின் மூலம் சிறந்த...