×

துபாயில் நடிகர் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்தில் சிக்கியது!!

துபாய்: நடிகர் அஜித்குமார் ஒரு கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக அண்மையில் துபாயில் அஜித்குமார் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது நடைபெற்ற பயிற்சி போட்டியின்போது நடிகர் அஜித்குமார் தனது காரை வேகமாக இயக்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரின் மீது பலமாக மோதி பலமுறை சுழன்று நின்றது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அஜித்குமாருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை என அஜித் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. விபத்து தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியாகியதால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

The post துபாயில் நடிகர் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்தில் சிக்கியது!! appeared first on Dinakaran.

Tags : Ajit Kumar ,Race Car ,Dubai ,Formula car race ,Race Car Accident ,Dinakaran ,
× RELATED துபாயில் ரேஸ் பயிற்சி அஜித் ஓட்டிய கார் விபத்தில் நொறுங்கியதால் பரபரப்பு