திருவாரூர் கொக்காலடி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

 

திருத்துறைப்பூண்டி, ஜன. 6: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சி யில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கொக்காலடி ஊராட்சியில், தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023-2024 மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) 2016 – 2017 முதல் 2021-2022 வரை கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தல் தொடர்பான சமூக தணிக்கை 2024-2025 சிறப்பு கிராம சபை கூட்டம் கொக்கலாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சமூக தணிக்கை தொடர்பான கள ஆய்வில் கண்டறியப்பட்ட ஆய்வு அறிக்கைகள் வாசிக்கப்பட்டு பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கொக்காலடி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கணேசன் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் செந்தில்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன், ஊராட்சி செயலர் பூங்கொடி, கூட்ட தலைவர் பக்கிரிசாமி, கிராம ஊராட்சி வள பயிற்றுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post திருவாரூர் கொக்காலடி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: