பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயிலில் பெருமாள் ராஜ தர்பார் கொண்டை அலங்காரத்தில் சேவை

 

பெரம்பலூர்,ஜன.7: பெரம்பலூர்  மதன கோபால சுவாமி கோவிலில் பெருமாள் ராஜ தர்பார் கொண்டை அலங் காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பெரம்பலூரில் நகராட்சி தெப்பக்குளம் அருகே உள்ள  மரகதவல்லி தாயார் சமேத  மதன கோபால சுவாமி திருக் கோவிலில், வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் பகல் பத்து 7ஆம் நாளான நேற்று மாலை 5:30 மணியளவில் பெருமாள் ராஜ தர்பார் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இதில் கோவில் செயல் அலுவலர் கோவிந்த ராஜன், முன்னாள் அறங் காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் பெரம்பலூர், அரணாரை, துறை மங்கலம், எளம்பலூர், விளாமுத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு, திருக்கோயிலை பெருமாளுடன் மூன்று முறை உட்பிரகாரம் வளம் வந்து அருள் பெற்றுச் சென்றனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.

The post பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயிலில் பெருமாள் ராஜ தர்பார் கொண்டை அலங்காரத்தில் சேவை appeared first on Dinakaran.

Related Stories: