தஞ்சாவூர் எஸ்பி-யை நேரில் சந்தித்து விவசாய சங்க நிர்வாகிகள் வாழ்த்து

 

தஞ்சாவூர், ஜன. 7: தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரை விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் கடந்த சனிக்கிழமை பொறுப்பு ஏற்று கொண்டார். அவரை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் சோழர் கலை மன்ற தலைவருமான ரவிச்சந்தர், பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோ நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நினைவு பரிசாக ராஜராஜன் சிலை ஆகியவற்றை வழங்கி பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அவர்களுடன் விவசாய அணி மாவட்ட செயலாளர் இளங்கோவன், விவசாயிகள் ஆம்பலாப்பட்டு தங்கவேல், நாகாச்சி கோவிந்தராஜ், காவேரி வேளாண் உழவர் நடுவம் நிறுவனர் தங்கராசு, ரவிச்சந்திரன், மற்றும் பல்வேறு விவசாய பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

The post தஞ்சாவூர் எஸ்பி-யை நேரில் சந்தித்து விவசாய சங்க நிர்வாகிகள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: