ராஜகிரி ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் ரூ.6.65 லட்சத்தில் நுண்ணுயிர் உரக்கிடங்கு

 

கும்பகோணம், ஜன.7: கும்பகோணம் அருகே ராஜகிரி ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் ரூ.6.65 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை நுண்ணுயிர் உரக்கிடங்கு தொடக்க விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் ரூ.6.65 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை நுண்ணுயிர் உரக்கிடங்கு மற்றும் நெகிழி அறவைக்கூடம் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயி நூர் முகமது முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர் கலந்து கொண்டு உரக்கிடங்கினை திறந்து வைத்து விவசாயிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை நுண்ணுயிர் உரத்தினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஷ்ரப் அலி, ஒன்றிய கவுன்சிலர் அனீஸ் பாரூக், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள், திடக்கழிவு மேலாண்மை பொறுப்பாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post ராஜகிரி ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் ரூ.6.65 லட்சத்தில் நுண்ணுயிர் உரக்கிடங்கு appeared first on Dinakaran.

Related Stories: