திருமயம், ஜன.6: அரிமளம் அருகே ஊராட்சி தலைவர் பணி நிறைவு நாளில் கிராம மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததை எடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஊராட்சி தலைவருக்கு வாழ்த்துக்களையும், அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.செட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தவமணி சிதம்பரம் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கே.செட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்குகள், சாலை வசதி உள்ளிட்டவைகள் மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது மக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் மக்களுக்காக பணி செய்ய வாய்ப்பளித்த அனைவருக்கும், அனைத்து பணிகளிலும் உறுதுணையாக இருந்த அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
The post அரிமளம் அருகே ஊராட்சி தலைவர் பணி நிறைவு நாள் appeared first on Dinakaran.