புதுக்கோட்டை, ஜன.6: தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப்பந்தயம் புதுக்கோட்டையில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்துகொண்டு நெடுந்தூர ஓட்டத்தை கொடியேசத்து துவக்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.மேலும் இந்த நெடுந்தூர ஓட்டமானது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி ரயில் நிலைய ரவுண்டானா , மாலையீடு, சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வந்தடைந்தது.
17, 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் என இரண்டு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது.
The post அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தய போட்டி appeared first on Dinakaran.