கீழ்வேளூர், ஜன. 6: நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கீழ்வேளூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் அழகேந்திரன் மற்றும் போலீசார் ஆழியூர் – நாகூர் சாலையில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது தே மங்கலம் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் 180 மிலி அளவு கொண்ட 150 பாண்டி சாராய பாட்டில்கள் இருந்தது.விசாரணையில் நாகை, செல்லூர் சுனாமி குடியிருப்பு வில்லியம்ஸ் மகன் ஜெல்சன் (23).பாப்பா கோவில், சமத்துவபுரம் பாரத் மகன் பாபு (22) என்பதும் காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்து 150 சாராய பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
The post கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர் கைது appeared first on Dinakaran.