வேதாரண்யம், ஜன. 6: வேதாரண்யம் அருகே 2 மனைவிக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி வடக்கு வாண்டையார் காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). இவர் அருகில் உள்ள செம்போடை மகாராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த பன்னீர் செல்வத்துக்கு வளர்மதி, மனோரஞ்சிதம் என்ற இரு மனைவிகள் மற்றும் 4 மகன்கள் உள்ளனர். ஆசாரி வேலை செய்து வந்த இவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
The post வேதாரண்யம் அருகே 2 மனைவிக்காரர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.