பந்தலூர், ஜன.3 : பந்தலூர் அருகே பாட்டவயல் சாலையில் உப்பட்டி முதல் குந்தலாடி வரையில் உள்ள பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது எதிரில் வரும் வாகனகளுக்கு வழிவிட முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.
பந்தலூரில் இருந்து உப்பட்டி, குந்தலாடி, பாட்டவயல் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் இந்த சாலையில் தினம் தோறும் வாகனங்கள் சென்று வருகின்றது. யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாலையோரம் சூழ்ந்த முட்புதர்; கடும் பாதிப்பு appeared first on Dinakaran.