ஊட்டி, ஜன.1: ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பிங்கர்போஸ்ட் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கூடுதல் ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. தனியார் மகளிர் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளன. இதனால், நாள் தோறும் ஊட்டி, கூடலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக, கூடுதல் கலெக்டர் அலுவலகத்திற்கு நாள் தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அதேபோல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால், பிங்கர்போஸ் பகுதியில் கூடலூர் செல்லும் வழித்தடத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் சாலைகளிலேயே பஸ்சிற்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகள் சாலைகளில் காத்து நிற்க வேண்டியுள்ளது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பிங்கர்போஸ்ட் பகுதியில் கூடலூர் செல்லும் வழித்தடத்தில் ஒரு நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post பிங்கர் போஸ்ட் பகுதியில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.