ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு கூட்டம்

 

ஈரோடு, ஜன. 1: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

இதில், மகளிர் உரிமைத் தொகை, வீட்டுமனைப் பட்டா, தார்சாலை வசதி, மின் மயானவசதி, இழப்பீட்டுத் தொகை, சமுதாயக்கூடம், சிறப்பு நூலகம், கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான வங்கிக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள் சீரமைத்தல், மருத்துவ சிகிச்சை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துதர வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் அவர் பெற்றுக்கொண்டு, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், ஈரோடு மாவட்டத்தில், வன்கொடுமை தொடர்பான வழக்குகள் மற்றும் தீர்வு உதவித் தொகை குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

The post ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: