மது, புகையிலை விற்ற 6 பேர் கைது

 

ஈரோடு, ஜன.3: ஈரோட்டில் சட்ட விரோத மது மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம் பிரிவு பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு வடக்கு போலீசார் அங்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அருண் பாண்டியன் (29) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோபி கலாரமணி பிரிவில் மது விற்பனையில் ஈடுபட்டதாக மொடச்சூரை சேர்ந்த சிவசந்திரன் (37) என்பவரை கோபி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஆசனூர் காரப்பள்ளம் சோதனை சாவடியில் கர்நாடகா மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரபு (38) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்றதாக கவுந்தப்பாடி கே.மேட்டூரில் ஜெயராஜ் (52), ஈரோடு மேட்டுக்கடையில் ஜனார்த்தனன் (42), ஈரோடு ஆர்கேவி சாலையில் பாபுராஜ் (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post மது, புகையிலை விற்ற 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: