தர்மபுரி, ஜன. 6: தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே கெண்டையனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி உமாதேவி (24). இவர்களுக்கு 2வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்த உமாதேவி, குழந்தையுடன் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தாய், மகனை தேடி வருகின்றனர். இதேபோல், அதியமான்கோட்டையை சேர்ந்தவர் முனிராஜ் மனைவி நவீதா (23). கடந்த 3ம் தேதி வெளியே சென்று வருவதாக கூறி புறப்பட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முனிராஜ் அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான நவீதாவை தேடி வருகின்றனர்.
The post இருவேறு இடங்களில் 2 பெண்கள் மாயம் appeared first on Dinakaran.