போர்பந்தர்: குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பலியாகினர். குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படையின் அதிநவீன ஏஎல்ஹெச் துருவ் என்ற ஹெலிகாப்டர் நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதில் கடலோர காவல்படை வீரர்கள் 3 பேர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சி முடிந்து போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கி தீபிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் வீரர்கள் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்களையும் மீட்டு போர்பந்தர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டது. உயிரிழந்த வீரர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மேலும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.
The post குஜராத்தில் பயங்கரம் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி appeared first on Dinakaran.