- வெங்கடேசன்
- விழுப்புரம்
- முதல் அமைச்சர்
- பொதுவுடைமைக்கட்சி
- இந்தியாவின் -
- மார்க்சிஸ்ட்
- மதுரை
- நேருஜி தெரு
- விழுப்புரம் மாநாடு
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் மதுரை வெங்கடேசன் எம்பியும் பங்கேற்றார். விழுப்புரம் நேருஜி வீதியில் உள்ள தனியார் மாலில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர் நேற்று காலை நடைபயிற்சி சென்றார். அப்போது திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவ குழுவினரை தொடர்பு கொண்டு சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் வெங்கடேசன் எம்பியிடம் போனில் பேசி நலம் விசாரித்தார். அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். சிகிச்சைக்குபின் அவர் பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வருக்கு நன்றி: எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில், ‘‘எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்து அக்கறையுடன் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு நன்றி. நேரில் நலம் விசாரித்த அமைச்சர்கள் பொன்முடி, கணேசன், முன்னாள் எம்பி கவுதம சிகாமணி, எம்எல்ஏ அன்னியூர் சிவா, விழுப்புரம் கலெக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
The post விழுப்புரம் மாநாட்டில் பங்கேற்க வந்த வெங்கடேசன் எம்பிக்கு திடீர் உடல்நல குறைவு: முதல்வர் நலம் விசாரித்தார் appeared first on Dinakaran.