×

பொங்கல் அன்று யுஜிசி நெட் தேர்வு கூடாது: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: யுஜிசி நெட் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரி ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்; பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு நடத்தக்கூடாது. ஜனவரி 14-ல் யுஜிசி நெட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 14 முதல் 16 வரை தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே இதே காரணத்துக்காக சி.ஏ. தேர்வு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல யு.ஜி.சி. நெட் தேர்வை 16-ம் தேதிக்கு பிறகு மாற்றி அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பொங்கல் அன்று யுஜிசி நெட் தேர்வு கூடாது: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : UGC ,Pongal ,Chief Minister ,M.K. Stalin ,Union Education Minister ,Chennai ,UGC NET ,Dinakaran ,
× RELATED பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு...