கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே கி.முதலிப்பட்டி ஊராட்சியில் 500 மீ தூரம் ஆத்தங்கரை சாலையை தார்சாலையாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி யில் கி.முதலிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. பல்வேறு வளர்ச்சி பணிகள் இந்த ஊராட்சி யில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புது குடியிருப்பு மேல தெரு ஆத்தங்கரை சாலை 500 மீட்டர் அளவில் மண் சாலையாக உள்ளது. இந்த 500 மீட்டர் மண் சாலையை தார் சாலையாக அமைக்க கோரி பல ஆண்டுகளாக அரசுக்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.
ஆனால் இது வரையும் எந்த வித்த நடவடிக்கை யும் எடுக்க படாமல் உள்ளதால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மண்சாலையால் சிரமப்பட்டு வரும் கிராமவாசிகள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை யான கி.முதலிப்பட்டி ஊராட்சி ஆத்தங்கரை சாலையை 500 மீட்டர் அளவிற்கு தார் சாலையாக மாற்றி அமைத்து தர வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் ரம்ஜான் பீவி ஷேக் பக்ருதீன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
The post கறம்பக்குடி அருகே கி.முதலிப்பட்டியில் 500 மீ தூரம் ஆத்தங்கரை சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.