கார் நிறுவனத்தின் ஷோரூமில் பண மோசடி செய்த ஊழியர்களுக்கு வலை

 

மேட்டூர், ஜன.5: சேலத்தில் பிரபலமான கார் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. மேட்டூர் நாட்டாமங்கலத்தில் உள்ள இதன் கிளையில், ஆடையூரை சேர்ந்த மணிகண்டன் (34), கருமலைக்கூடலைச் சேர்ந்த தர் (31) ஆகியோர் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்து வந்தனர். கடந்த டிசம்பர் 28ம் தேதி, முத்துசாமி என்பவரின் காரை சர்வீஸ் செய்த மணிகண்டன், அவருக்கு ரூ.0.00 என பில் பதிவு செய்து விட்டு, தனது ஜிபே வங்கி கணக்கிற்கு ரூ.6,667 பெற்றுக்கொண்டார்.

அதேபோல், ஜனவரி 1ம் தேதி, லோகநாதன் என்பவருடைய காரின் வீல் கப்பை மாற்றிய தர், அதற்கான தொகை ரூ.300ஐ, தனது ஜிபே கணக்கில் பெற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த பணத்தை, நிறுவனத்தின் கணக்கில் செலுத்தவில்லை. இதனை கண்டுபிடித்த சேலத்தில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரி இளவரசன் (48), நேற்று முன்தினம் மேட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், மேட்டூர் எஸ்ஐ காத்தவராயன் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மணிகண்டன், தர் ஆகியோரை தேடி வருகிறார்.

The post கார் நிறுவனத்தின் ஷோரூமில் பண மோசடி செய்த ஊழியர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: