கோவை-லோக்மான்ய திலக் ரயில் 4 மணி நேரம் தாமதம்

சேலம், டிச.31:கோவை-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (11014), திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், கோவையில் காலை 8.50 மணிக்கு புறப்படும். ஆனால் நேற்று, கோவையில் 3.40 நிமிடம் தாமதமாக மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படியே மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, சுமார் 4 மணி நேரம் தாமதமாக வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு வந்தது. இதனால், அந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள், ஸ்டேஷனில் காத்திருந்து கடும் அவதியடைந்தனர். மறுமார்க்கத்தில் லோக்மான்ய திலக்கில் இருந்து கோவைக்கு வந்த இணை ரயில், தாமதமாக வந்து சேர்ந்ததால், இங்கிருந்து புறப்பட வேண்டிய கோவை-லோக்மான்யதிலக் ரயில் தாமதமாக இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோவை-லோக்மான்ய திலக் ரயில் 4 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: