கண் தெரியாமல் தவித்த மயில் மீட்பு

ஓமலூர், ஜன.4: ஓமலூர் அருகே, பச்சனம்பட்டி கிராமத்தில் மயில்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில், அங்குள்ள வயல் காட்டில் ஒரு பெண் மயில் வட்டமடித்து கீழே விழுந்தது. இதை பார்த்த இளைஞர்கள், அருகில் சென்று பார்த்த போது, 2 கண்கள் தெரியாமல், மூடி கொண்டு உணவு, தண்ணீர் கூட எடுக்க முடியாமல் மயங்கி விழுந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வன பாதுகாவலர் மயிலை பார்த்தபோது கண்களை கடினமாக மூடிக்கொண்டிருந்தது. அங்கு வந்த கால்நடை மருத்துவர் மயிலின் கண்ணில் இருந்து அழுக்கை அகற்றி அதே பகுதியில் விட்டனர்.

The post கண் தெரியாமல் தவித்த மயில் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: