இது தொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை மகளிர் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக எஸ்ஐடி குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக ஆதாரமற்ற தகவல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக ஆபாச பதிவுகள் அடங்கிய சாதனங்கள் பறிமுதல் எனவும் தவறான தகவல் பரவி வருகிறது.
திருப்பூரை சேர்ந்த ஒருவர் வழக்கில் தொடர்புடையதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பாக எந்தவொரு அறிக்கையோ, கருத்தோ தணி நபருக்கோ, ஊடகத்துக்கோ சிறப்பு புலனாய்வுக்குழு தெரிவிக்கவில்லை. எஸ்.ஐ.டி விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து பொதுவெளியில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை.
ஆதாரமற்ற, ஊகத்தின் அடிப்படையில் வரும் தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி விசாரணையை பாதிக்கும். தவறான தகவல்கள் சம்பந்தப்பட்டோருக்கு கடும் பின்விளைவை ஏற்படுத்தி புலன் விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
The post அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பவேண்டாம்: தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் appeared first on Dinakaran.