ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதே மரபு என்று சபாநாயகர் விளக்கம் அளித்தார். மரபை மாற்ற முடியாது என்றும் சபாநாயகர் கடந்த ஆண்டே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். கடந்த ஆண்டும் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர். இந்த நிலையில், இன்று தொடங்கிய பேரவை கூட்டத் தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறி உள்ளார்.
தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி உள்ளது சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் என கண்டனங்கள் எழுந்துள்ளன. சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது குறித்து விளக்கம் அளித்த எக்ஸ் தள பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டிருந்தது. திருத்திய பதிவை மீண்டும் ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார். ஆளுநர் மாளிகை முதலில் அளித்திருந்த விளக்கத்தில் நாடாளுமன்றத்தில் முதலில் தேசிய கீதம் பாடப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தது. புதிய பதிவில் நாடாளுமன்றத்தை மேற்கோள்காட்டிய வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவி : தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி 2வது முறையாக வெளியேறினார்!! appeared first on Dinakaran.