கஞ்சா விற்ற வாலிபர் கைது

போடி, ஜன. 4: தேனி மாவட்டம், போடி தாலுகா போலீஸ் எஸ்ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் பொட்டல் களம் அருகிலுள்ள செட்டிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்மாய் கரையில், ஒரு வாலிபர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே ஊரில் உள்ள காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சூர்யா(28) என தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: