திருப்பரங்குன்றத்தில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சாலையில் உருவான விரிசல்

திருப்பரங்குன்றம், ஜன. 4: மதுரை, பழங்காநத்தம் முதல் தோப்பூர் வரையிலான சுமார் 6 கி.மீ தூரத்திற்கு, இரு வழிச்சாலையை கன்னியாகுமரி – பெங்களூரு நான்கு வழிச்சாலையோடு இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த ஆண்டு துவங்கி முழு வீச்சில் நடைபெற்று, தற்போது பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தென்கால் பகுதியில் அமைக்கப்பட்ட சாலை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் முன்பாகவே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதன்படி, சாலையின் நடுவே பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகளில் தற்போது நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதிய சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘ஒப்பந்தம் எடுத்தவர்கள் சாலையை முறையாக அமைக்கிறார்களா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இது போன்று பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சாலையில் விரிசல் ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர்.

The post திருப்பரங்குன்றத்தில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சாலையில் உருவான விரிசல் appeared first on Dinakaran.

Related Stories: