×

ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி பயணியை தாக்கிய ஏட்டு மீது வழக்கு

திருவாரூர்: திருவாரூர் தென்மருதூரை சேர்ந்தவர் கருணாநிதி(53). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 1ம்தேதி இரவு மன்னார்குடியில் இருந்து மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்துள்ளார். சென்றார். இதில் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்தார். நீடாமங்கலத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் பழனி(45), சென்னைக்கு செல்ல நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்றார். ரயில் வந்து நின்றபோது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏட்டு பழனி ஏறுவதற்கு முயன்றார். அப்போது கருணாநிதிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவாரூரில் மாற்றுத்திறனாளி பெட்டியில் ஏறிய பழனி, கருணாநிதியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி பயணியை தாக்கிய ஏட்டு மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Karunanidhi ,Thiruvaroor Tenmarathur ,Chennai ,Mannarkudi ,PALANI ,NEEDAMANGALA ,
× RELATED கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு...