×

எலக்ட்ரிக் கடைக்காரரிடம் ரூ.38 லட்சம் நூதன மோசடி: தம்பதி உள்பட 3 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (42). இவர், பர்மா பஜாரில் எலக்ட்ரிக் கடை நடத்துகிறார். இவரது பக்கத்து கடைக்காரரான முகைதீன் அப்துல் காதர் என்பவர் செந்திலிடம் நட்பாக பழகி, எனது உறவினர் வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து எலக்ட்ரிக் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, இங்கு விற்றால் அதிக லாபம் பார்க்கலாம் எனக் கூறி ரூ.38 லட்சத்தை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கியுள்ளார்.

அதன் பிறகு எலக்ட்ரிக் பொருட்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறி ஒரு வருடமாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என செந்தில் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து பணத்தை தருவதாக ஏமாற்றி வந்த முகைதீன் கடந்த டிசம்பர் மாதம் செந்திலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நீதிமன்றத்தையும் நாடினார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் பழைய வண்ணாரப்பேட்டை காட்பாடா மின்ட் 1வது குறுக்கு தெருவை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் (43) மற்றும் மோசடிக்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவி உஸ்னாரா பேகம் (38) மற்றும் ஏஜாஸ் (37) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post எலக்ட்ரிக் கடைக்காரரிடம் ரூ.38 லட்சம் நூதன மோசடி: தம்பதி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Senthil ,Kodungaiyur Chinnandi Matham ,Burma Bazaar ,Muhaideen Abdul Kader ,
× RELATED தனிமையில் உள்ளீர்களா… பெண்களிடம் பழக...