×

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயார் ஆகாத மைதானம்: சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப். 19ம் தேதி முதல் மார்ச் 9ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடக்கிறது. இதில் இருபிரிவிலும் முதல் இரு இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.

மற்ற போட்டிகள் லாகூர், ராவல்பிண்டி, கராச்சி உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற இருப்பதால், இதனை சிறப்பாக நடத்தி முடிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்திருக்கிறது. இதனால் பழமையான மைதானங்கள் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு நவீன வடிவத்தில் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக முக்கிய மைதானமான லாகூர் மைதானத்தில் பல்வேறு பணிகள் இன்னும் எஞ்சி இருக்கிறது. தொடருக்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் லாகூர் மைதானத்தில் ட்ரெஸ்ஸிங் ரூம் மீடியாவும் மற்றும் பார்வையாளர்கள் மாடம் என அனைத்தும் முடிவடையாமல் இருக்கிறது.

தொடரின் முதல் போட்டி வரும் பிப். 19ம் தேதி லாகூர் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. அதில், பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதுகிறது. இதனால் அந்த ஆட்டத்திற்குள் மைதானத்தை முழு வீச்சில் தயாராக்கும் பணியில் ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயார் ஆகாத மைதானம்: சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் appeared first on Dinakaran.

Tags : Stadium ,Champions Trophy ,Pakistan Cricket Board ,Lahore ,Champions Trophy cricket ,Pakistan ,India ,Bangladesh ,South ,Africa ,Australia ,Zealand ,England ,Afghanistan ,Dinakaran ,
× RELATED ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான...