சென்னை: தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலைவிழா நடத்துவது குறித்து, கனிமொழி எம்பி தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. இதில்,எடுக்கப்பட்ட முடிவுகளின்படி வருகிற 13ம் தேதி (திங்கள்) மாலை 6 மணியளவில் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை முதல்வர் தொடங்கி வைப்பார்.நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திப்பாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைவிழா நடைபெற உள்ளது.
The post ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.