×

பைக்கில் சென்றபோது விபத்து லாரி சக்கரத்தில் சிக்கி கப்பல் அதிகாரி பலி

பூந்தமல்லி, ஜன.5: பூந்தமல்லி அருகே பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி முன்னாள் கப்பல் அதிகாரி உயிரிழந்தார். சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (68). கப்பல் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் நேற்று காலை பைக்கில் பூந்தமல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயல் ரேஷன் கடை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன ராஜேந்திரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ராஜிவ்காந்தி (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக்கில் சென்றபோது விபத்து லாரி சக்கரத்தில் சிக்கி கப்பல் அதிகாரி பலி appeared first on Dinakaran.

Tags : Poonamalli ,Rajendran ,Annanagar West, Chennai ,Dinakaran ,
× RELATED மதுரவாயிலில் கல்லூரி பேராசிரியர்...