மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 16 வங்கதேசத்தினர் கைது

மும்பை: வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாக மகாராஷ்டிராவில் குடியேறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து கடந்த நான்கு தினங்களாக மும்பை, நாசிக், சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் நான்டெட் ஆகிய மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது இந்த மாவட்டங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார் அட்டைகளை பெற்று சட்டவிரோதமாக தங்கி இருந்த 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் தானே மாவட்டம் மான்கோலி பகுதியில் உள்ள பிரேர்னா வளாகத்தில் உள்ள ஒரு குடோனில் காவல்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 7 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

The post மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 16 வங்கதேசத்தினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: