சென்னை : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நா.த.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த நிலையில் திரண்டிருந்த நா.த.க.வினர் கைது செய்யப்பட்டனர்.