×

இலவச வீட்டுமனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு

 

திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி அமைச்சர் சா,மு.நாசரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வீடற்ற புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா, நடுதெரு மேற்கில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு வரி மற்றும் மின் இணைப்பு வழங்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமையில் பொதட்டூர்பேட்டை சேர்ந்த திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் இ.கே.உதயசூரியன் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் சா.மு.நாசர், கலெக்டர் த.பிரபுசங்கர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். வீடற்ற ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, மின் இணைப்பு மற்றும் வீட்டு வரி ரசீது கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

The post இலவச வீட்டுமனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Tiruttani ,Minister ,S.M. Nassar ,Pothatturpet Town Panchayat ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டா கோரி அமைச்சரிடம் மனு