- வைத்யா
- வீரராகவா
- பெருமாள் கோயில்
- திருவள்ளூர்
- ஸ்ரீ
- வீரராகவ பெருமாள் கோயில்
- மார்கழி
- ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
- திருவள்ளூர்
- வீரராகவ பெருமால்
- கோவில்
திருவள்ளூர்: ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோகளுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு அமாவாசை நாட்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வதும் கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் வழக்கம். அதன்படி மார்கழி மாத அமாவாசைக்கு வீரராகவரை தரிசித்து விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் தங்களை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.
அதன்படி நேற்று திருவள்ளூர் மட்டுமல்லாது வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோய் தீர்க்க வல்லவர் என்பதால் நோய்தீர வேண்டியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோயில் குளத்தில் வெள்ளம் கரைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
The post வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.