- பொத்தட்டுர்பேட்டை
- திருத்தணி
- பொதட்டூர்பேட்டை டவுன் பஞ்சாயத்து கவுன்சில்
- பொதட்டூர்பேட்டை டவுன் பஞ்சாயத்து
- சபை
- டவுன் பஞ்சாயத்து
- ஏஜி ரவிச்சந்திரன்
- அஇஅதிமுக
- தின மலர்
திருத்தணி, ஜன.1: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில், முதலமைச்சரின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் (அதிமுக) தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் டி.ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகுமார் வரவேற்றார். கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் பொது விவாதம் நடைபெற்றது.
அப்போது முதலமைச்சரின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள் புதுப்பித்தல், மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரி சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.28.91 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, நீர்தேக்க தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கும், பேரூராட்சியில் நிலுவையில் உள்ள ரூ.50 லட்சம் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணத்தை விரைந்து பொதுமக்களிடமிருந்து வசூல் செய்ய கோருதல் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் இளநிலை உதவியாளர் முருகவேல் நன்றி கூறினார்.
The post பொதட்டூர்பேட்டையில் ரூ.4 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.