வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்தது ஒன்றிய அரசு


டெல்லி: வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக ஒன்றிய அரசு அங்கீகரித்தது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் மக்கள் அனைவரும் இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயம், அதீத கன மழையுடன், திடீரென்று பெருத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பான்மையான மக்கள் மண்ணில் புதையுண்டர். அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி மண்ணில் புதையுண்ட சிலரை காப்பாற்றி இருந்தாலும், இதில் 251 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அத்துடன் வீடுகளை இழந்த பொது மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் புனரமைப்பு திட்டங்களுக்கு ரூ. 3000 கோடி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. ஆனால் ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாநில பேரிடர் நிதியில் உள்ள ரூ.390 கோடியை வயநாடு பேரிடருக்கு பயன்படுத்தும்படி கடிதத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு, தற்போது வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்துள்ளது.

The post வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: