கடிதம் அனுப்பியுள்ளது. சிறை விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றி அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், சிறைத்துறை தலைவர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. சிறைகளில் சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக தொடர்ந்த வழக்கில் சிறைகளில் எந்தவிதமான சாதிய பாகுபாடும் காட்டக்கூடாது என கடந்த அக்டோபரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சிறை விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, சிறைகளில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது தடை செய்து 3 பிரிவுகள் சிறை விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. சிறைகளில் வேலை ஒதுக்குவதில் சாதிய பாகுபாடு காட்டப்பட கூடாது, மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டம் சிறைகளுக்கும் பொருந்தும், செப்டிக் டேங்குகளை கைகளால் சுத்தம் செய்யும் பணியில் சிறை கைதிகளை ஈடுபடுத்தக் கூடாது என விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என்பதற்கான விளக்கத்தையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது. 5 ஆண்டுக்குள் வெவ்வேறு குற்றங்களுக்கு ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் தொடர் குற்றவாளி என கருத வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
The post சிறையில் சாதிய பாகுபாடு கூடாது.. செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியில் கைதிகளை ஈடுபடுத்தக் கூடாது : ஒன்றிய உள்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.