செஸ் வீரர் கார்ல்ஸன் எதிர்ப்பைத் அடுத்து வீரர்களின் உடை கட்டுப்பாடுகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தளர்த்தியது. நியூயார்க்கில் நடந்த ரேபிட் செஸ் போட்டிக்கு ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்ததால் மேக்னஸ் கார்ல்ஸனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மரபான உடைகளையே செஸ் வீரர்கள் அணிந்து விளையாட வேண்டும் என்பது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் விதிமுறையாகும் என்று தெரிவித்திருந்தது.
9-வது சுற்றில் விளையாட அனுமதிக்குமாறும், மறுநாள் விதிப்படி உடையணிந்து வருவதாக கார்ல்ஸன் கூறியதை ஃபிடே ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அலுவல் பூர்வ உடை அணியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்ததற்காக கார்ல்ஸனுக்கு 200 டாலர் அபராதம் விதித்தது செஸ் கூட்டமைப்பு.
பல தரப்பினரும் விமர்சித்ததை அடுத்து, அலுவல் பூர்வ உடை அணிய வேண்டும் என்ற விதியை ஃபிடே தளர்த்தியது. செஸ் போட்டியில் வீரர்கள் ஜீன்ஸ் அணிந்து வர அனுமதிக்கப்படும் என்று ஃபிடே தலைவர் போர்க்கோவிச் அறிவித்துள்ளார்.
The post செஸ் வீரர் கார்ல்ஸன் எதிர்ப்பைத் அடுத்து வீரர்களின் உடை கட்டுப்பாடுகளை தளர்த்தியது சர்வதேச செஸ் கூட்டமைப்பு! appeared first on Dinakaran.