களக்காடு: களக்காடு மேற்கு தொடர் ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, யானை, கரடி, கடமான், செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவைகள் அடிக்கடி மலை அடிவார கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். சமீப காலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் எல்லை மீறி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானைகளும் மலை அடிவாரத்தில் முகாமிட்டு வருவதால் விவசாயிகள் மேலும் அச்சமடைந்துள்ளனர். நேற்று இரவில் மேல வடகரை ஊருக்கு அருகே உள்ள விளை நிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்தன.
இந்த யானைகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். யானைகள் நாசம் செய்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானைகளை வனப் பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post களக்காடு அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: ஆயிரம் வாழைகள் நாசம் appeared first on Dinakaran.