சேலம், டிச.28: சேலம் இரும்பாலை 3வது கேட் அருகே எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்றுமுன்தினம் அலுவலகத்தை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ₹1500 மதிப்பிலான பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுபற்றி இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post போஸ்ட் ஆபீசில் திருட்டு appeared first on Dinakaran.