தம்மம்பட்டி, டிச.24: தம்மம்பட்டி பஸ் நிலையம் அருகே, ஹான்ஸ் மற்றும் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த ஆனந்த் (45) என்பவரின் பீடா கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எஸ்ஐ சக்திவேல், ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.