×

15 வயது சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது

சங்ககிரி, டிச.25: சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்து வீராச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (23). கூலித் தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 7ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெற்றோர் ஏற்காததால்,. சிறுமி பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர், இல்லாதபோது மூர்த்தி சிறுமியை சந்தித்து வந்துள்ளார். இதனால் சிறுமி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சங்ககிரி ஊராட்சி ஒன்றிய, விரிவாக்க அலுவலர் அம்சவள்ளிக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அவர் விசாரித்ததில், சிறுமி குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் அம்சவள்ளி நேற்று புகார் அளித்துள்ளார். இதன் பேரில், சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி, சிறப்பு எஸ்ஐ ரேவதி ஆகியோர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக மூர்த்தி மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post 15 வயது சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : POCSO ,Sangakiri ,Murthy ,Veerachipalayam ,Sangakiri, Salem district ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...