×

கம்பத்தில் ஆர்ப்பாட்டம்

கம்பம், டிச. 28: கம்பம் நகர இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் யூத் லீக் சார்பாக அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பம் ஏ.எம்.சர்ச் தெரு அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிராஜி வரவேற்புரையாற்றினார். நகர செயலாளர் சேட் முன்னிலை வகித்தார்.

முன்னாள் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் பாவா பத்ருதீன், வாவேர் பள்ளி தலைமை இமாம், மாநில ஜமாத்தின் உலமா துணைத் தலைவர் அலாவுதீன் மிஸ்பாகி, முஹம்மது இப்ராஹிம் உஸ்மானி, மற்றும் பலர் கண்டன உரையாற்றினார்கள். நகர பொருளாளர் காஜாமைதீன் நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் யூத் லீக் மாவட்ட நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கம்பத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Cumbum ,Cumbum City India Union Muslim League ,Youth League ,Union Minister ,Amit Shah ,Ambedkar ,Cumbum A.M. Church Street… ,Dinakaran ,
× RELATED பள்ளிக்குள் நுழைந்து மிரட்டல் வழக்கில் மேலும் ஒரு பாஜ நிர்வாகி கைது