×

குடும்பப் பிரச்சனை காரணமாக தீக்குளித்த பெண் பலி

 

பெரம்பலூர்,டிச.28: பெரம்பலூரில் குடும்பப் பிரச்சனை காரணமாக வயலில் தீக்குளித்த பெண் சிகிச்சைக்கு முன்பாக பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர்,வடக்கு மாதவி ரோடு, முல்லை நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(48) இவரது மனைவி முத்து லட்சுமி (43). நேற்று (27 ஆம் தேதி) கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மகேந்திரன் முத்துலட்சுமியை திட்டியுள்ளார்.

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த முத்துலட்சுமி கடைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, பெரம்ப லூர் ரோஸ் நகர் அருகே உள்ள தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயல்பகுதிக்குச் சென்று மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீவைத்துக்கொண்டுள்ளார். தீயில் வெந்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துலட்சுமியை, அங்கு வந்த நில உரிமையாளரான தேவேந்திரன் பார்த்துவிட்டு பெரம்பலூர் போலீசாருக்குத் தகவல் தெரிவி த்துள்ளார்.

சம்பவ இடம் சென்ற பெரம்பலூர் போலீசார் உயிருடன் இருந்த முத்துலட்சுமியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே முத்து லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

The post குடும்பப் பிரச்சனை காரணமாக தீக்குளித்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Mahendran ,Mullai Nagar, North Madhavi Road ,Muthu Lakshmi ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...