- குருந்தாடி மனை கிராமம்
- புதுக்கோட்டை
- திருவரங்குளம்
- பஞ்சாயத்து
- யூனியன்
- தமிழ்நாடு அரசு கால்நடை துறை
- வெங்கடகுளம் கால்நடை மருந்தகம்
- வெங்கடகுளம் கால்நடை உதவி...
புதுக்கோட்டை, டிச. 28: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் குறுந்தடி மனை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ துறையின் சார்பில் வேங்கட குளம் கால்நடை மருந்தகம், சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. வேங்கடகுளம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பாவை தலைமையில் கால்நடை ஆய்வாளர் சிவகுமார் உதவியாளர் வடிவேல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் சினை பரிசோதனை, கிடாரிகளுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது.
கால்நடைகளுக்கு காயங்களுக்கு மருந்து அளித்தல், குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கினர். விழாவில் கால்நடை பராமரிப்பு முறைகள பற்றியும், தமிழக அரசின் கால்நடை துறையின் திட்டங்கள் பற்றிய விவசாயிகளுக்கு எடுத்து கூறினர் . விவசாயிகள் ஏராளமான மாடுகளை கொண்டு வந்து கோமாரி நோய் தடுப்பூசி போட்டு சென்றனர். முன்னோடி விவசாயி செல்வி நன்றி கூறினார்.
The post குறுந்தடி மனை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.